பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்து. திருமங்கலம் பஸ் நிலையத்தைவிட்டு புறப்புபட்ட சிறிது நேரத்தில் விருதுநகரில் இருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை திருமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார்.கணேசன் தான் ஓட்டிவந்த பஸ்சை அழகுமலை கண்ணன் ஓட்டி வந்த பஸ்சுக்கு வழிவிடாமல் மறித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த கணேசன் அழகு மலை கண்ணன் உதட்டை கடித்து குதறினார். ரத்தம் கொட்டியதால் அவர் அலறி துடித்தார். டிரைவர்கள் இடையே ஏற்பட்ட இந்த தகராறில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.படுகாயம் அடைந்த அழகுமலை கண்ணன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி