இது குறித்து, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாக்ஹீட் மார்டின் சூரிய மற்றும் வானியற்பியல் ஆய்வகத்தின் தலைமை விஞ்ஞானி பார்த் டே பான்டியூ என்பவர் கூறும்போது, செயல் மிகுந்த பகுதியில் கதிர்வீச்சு அல்லது அதிக அளவிலான துகள்கள் வெளியீடு குறித்து நாங்கள் எங்களது கவனத்தை செலுத்தினோம்.அதன் பின் நாங்கள் காத்திருந்தோம். ஏதேனும் ஒரு விசயத்தை தெரிந்து கொள்வோம் என நம்பிக்கையுடன் இருந்தோம். எங்களது ஆய்வகத்திற்கு இது முதல் தெளிவான பட பதிவு. இதனால் ஆய்வு குழு ஆச்சரியத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.கடந்த மே 9ம் தேதி சூரியனில் இருந்து அதிக அளவிலான கதிர்வீச்சு துகள்கள் வெளியாகின. இது ஐரீஸ் எனப்படும் படங்களை பதிவு செய்யும் ஸ்பெக்டிரோகிராப் கருவி வழியே படமாக்கப்பட்டது.
அதில், சூரியனின் கதிர்வீச்சு துகள்கள் பூமியை விட 5 மடங்கு அகலம் மற்றும் 7 1/2 மடங்கு உயரம் அளவிற்கு வெளியாகியுள்ளது.வெவ்வேறு வெப்ப நிலைகளில் அணுக்கள் வெளிப்படுத்தும் ஒளி அலைகளை படம் பிடிக்கும் திறனை ஐரீஸ் கொண்டுள்ளது. சூரியனின் மேற்பரப்பில் உள்ள அடுக்கினை பல்வேறு உயர நிலைகளில் இருந்தும் ஐரீஸ் படம் பிடிக்க கூடியது.அதிக அளவிலான துகள்கள் வெளிப்படும்பொழுது, சூரியனின் காந்த புலத்தில் ஏற்படும் மாற்றமானது சூரியனின் பெரும்பாலான மேற்பரப்பு பகுதியில் விரைவாக விரிவு ஏற்படும் நிலையை தோற்றுவித்துள்ளது. அதனுடன் விண்வெளியில் கோடிக்கணக்கான டன்கள் துகள்கள் வெளியேற்றப்பட்டு உள்ளன.இந்த சூரிய கதிர்வீச்சு வெளிப்பாட்டால் வெளியேறும் மின்னூட்ட செறிவு கொண்ட துகள்கள் 2 அல்லது 3 தினங்களில் பூமியை வந்தடையும்.
அது பூமியின் காந்த புல பகுதியின் வெளி அடுக்கினை துளைத்து கொண்டு உட்புகும்.இவை தொலைதொடர்பு கருவிகளின் சிக்னல்கள் மற்றும் மின்சார கொள்கலன்களில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. எனினும், இந்த துகள்கள் பூமியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது.இந்த நிகழ்வானது சூரிய கதிர்வீச்சு வெளிப்பாடு எனப்படும் அதிக அளவிலான ஒளி அலைகள் வெளிப்படுவதை ஒத்த நிகழ்வாகும். இந்த இரு நிகழ்வுகளையும் படம் பிடிக்கும் திறன் கொண்டது ஐரீஸ். சூரியனின் மேற்பரப்பில் உள்ள அடுக்கு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கடந்த ஜூன் 2013ம் ஆண்டில் அது செலுத்தப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி