சென்னை:-ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சசிகுமார் படங்கள்தான் கேரளாவில் ரிலீசாகும். அடுத்த கட்ட ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு இருக்காது. ஆனால் விஜய் வசந்த் நடிக்க அவர் தம்பி வினோத்குமார் தயாரித்த என்னமோ நடக்குது படம் கேரளாவில் ரிலீசாகிறது.
இதனை ராஜபாண்டி இயக்கி இருந்தார். விஜய் வசந்துடன் சாட்டை மகிமா, ரகுமான், பிரபு நடித்திருந்தார்கள்.அப்பாவி ஒருத்தன் இரண்டு தாதாக்களின் மோதலில் சிக்கிக் கொண்டு படுகிற அவஸ்தைதான் கதை. தமிழ் நாட்டில் ஓரளவுக்கு ஓடி வெற்றி பெற்ற இந்தப் படத்தை வருகிற 20ம் தேதி கேரளா முழுவதும் 40 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி