சுரேஷ் ரெய்னா ஆடும் போட்டிகளுக்கும் சென்றார். அப்போதே சுருதிஹாசனுக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. பிறகு கிரிக்கெட் போட்டிகளில் சுருதிஹாசனை காண்பது அரிதானது. இதனால் கிசுகிசுவும் அடங்கி போனது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர்களை இணைத்து செய்திகள் வந்துள்ளன.இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. சுரேஷ் ரெய்னா ஏற்கனவே பூர்ணா படேலுடன் இணைத்து பேசப்பட்டார். இவர் முன்னாள் மத்திய மந்திரி பிரபுல் படேல் மகள் ஆவார்.
பிறகு இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலிப்பதாகவும் செய்திகள் வந்தது. இப்போது சுருதிஹாசனுடன் பேசப்படுகிறார். இதனை இருவருமே மறுத்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டரில் சுருதிஹாசனுடன் என்னை இணைத்து பத்திரிகைகளில் செய்திகள் பரவி உள்ளது. யாருமே இதனை ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை. எல்லோருக்கும் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். நான் யாரையும் காதலிக்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.சுருதிஹாசன் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுரேஷ் ரெய்னாவை சுருதி ஹாசன் காதலிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. சுருதிஹாசன் சினிமாவில் பிசியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி