ஐதராபாத்:-சினிமா படபிடிப்புக்காக டெல்லி சென்ற நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியா கவுண்டரில் பயணிகள் கியூவில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரகாஷ்ராஜும் அவர்களுடன் நின்றார்.
அப்போது சக பயணி ஒருவர் பிரகாஷ்ராஜை தள்ளிவிட்டார். கீழே விழப்போன பிரகாஷ்ராஜ் சுதாரித்து நிமிர்ந்தார். அந்த பயணியை பிரகாஷ்ராஜ் கண்டித்தார். இதில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டி கொண்டனர்.
கோபமான பிரகாஷ்ராஜ் அந்த பயணியின் சட்டை காலரை பிடித்து இழுத்தார். பதிலுக்கு அவரும் பிரகாஷ் ராஜ் சட்டையை பிடித்தார். இந்த சண்டையை பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள் குறுக்கிட்டு இருவரையும் சமாதானம் செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி