மாநாட்டில் பாரதீய ஜனதா அரசின் முக்கிய கூட்டணி கட்சி தலைவரான தெலுங்குதேச கட்சி தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து பேசுகையில் ஆந்திர பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக தெலுங்குதேச கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கு தேச கட்சியின் புதிய அரசாங்கம் அமைக்க எந்த நெருக்குதலும் இல்லை. தெலுங்கு மக்கள் அனைவரும் என்.டி.ராமராவை பெருமைப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். நாட்டின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதை தெலுங்குதேச கட்சி நிறுவனரும் மறைந்த முதல்–மந்திரியுமான என்.டி.ராமராவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். என்.டி.ராமராவின் பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்றார்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–பாராளுமன்ற தேர்தலில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்குதேச கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிக்க தேர்தல் கமிஷனை வலியுறுத்துவது, தெலுங்குதேச கட்சி நிறுவனர் மறைந்த முதல்–மந்திரி என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் என்.டி.ராமராவ் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
10 ஆண்டுக்கு பின்னர் ஆட்சி பொறுப்பை தெலுங்குதேசம் கட்சி ஏற்கபோவதைத் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் சந்திரபாபு நாயுடு அஞ்சலி நிகழ்ச்சியில் மஞ்சள் சட்டை அணிந்தபடி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி