மும்பை:-மகாராஷ்டிரா மாநில அரசின், பள்ளி பாடத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு அத்தியாயத்தை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. சிறப்பு மிக்க கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரை பற்றி படிக்கும் போது மாணவர்களுக்கு நல்ல ஈர்ப்பு ஏற்படும் என்பதாலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு முதல், கிரிக்கெட்டின் வாழும் கடவுள் என்ற அத்தியாத்தின் மூலம் டெண்டுல்கரை பற்றி தெரிந்து கொள்ள உள்ளனர். மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் பற்றிய அத்தியாயம் அச்சடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சரான ராஜேந்திர டார்டா கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் டெண்டுல்கர் பற்றிய பாடத்திட்டத்தை அனைத்து வகுப்புகளிலும் சேர்க்க அம்மாநில அரசு யோசித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அம்மாநில பாடத்திட்டத்தில் கவாஸ்கர் மற்றும் சந்து போர்டே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி