அரசியல்,செய்திகள்,திரையுலகம் ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!…

ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!…

ராஜபக்சேவை அழைத்தது தமிழ் உணர்வை இழிவுபடுத்தும் செயல் என நடிகர் சத்யராஜ் பேட்டி!… post thumbnail image
கோவை:-கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வேடர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில்வதற்காக ஆலத்தி வச்சினம்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. முகாமை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த பள்ளியில் படித்து வருகிறார்கள்.

அவர்களுக்கு இலவச காலணி வழங்கும் விழா நடைபெற்றது. நடிகர் சத்யராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இலவச காலணிகளை வழங்கினார்.பின்னர் சத்யராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்திய பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மோடியின் பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பது கண்டனத்துக்குரியது. இது தமிழர்களின் உணர்வை இழிவுபடுத்தும் செயல்.

ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதன்முதலாக குரல் கொடுத்தவர் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாதான். அவர் இலங்கை தமிழர் நலன் காக்க தொடர்ந்து பாடுபட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.மேற்கண்டவாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி