11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெர்மனி வீரர் நிகோராஸ்பர்க் (மெர்சிடஸ் அணி) 260.520 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை 1 மணி 49 நிமிடம் 27,661 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். வெற்றி பெற்ற அவருக்கு 25 புள்ளிகள் கிடைத்தன. அதே அணியை சேர்ந்த இங்கிலாந்து வீரர் லிவிஸ் ஹாமில்டன் 9.2 வினாடி பின் தங்கி 2–வது இடத்தை பிடித்து அதற்குரிய 18 புள்ளிகளை பெற்றார்.
இந்த வெற்றியிள் மூலம் நிகோ ராஸ்பர்க் புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 6 சுற்று முடிவில் ராஸ்பர்க் 122 புள்ளிகளும், ஹாமில்டன் 118 புள்ளிகளும் பெற்று முதல் இரு இடங்களை வகிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி