சென்னை:-இயக்குனர் பார்த்திபன் தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை கதையே இல்லாமல் புதுமையாக எடுத்து வருகிறார். ஆர்யா, அமலாபால், சேரன், பிரகாஷ்ராஜ், டாப்ஸி, விஜய் சேதுபதி, விஷால் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
இதுதவிர தன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க 22 நடிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதற்காக அவர் தயாரித்துள்ள புதுமையான அழைப்பிதழில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பவர்களின் படங்களை வெளியிட்டு அதற்கு அடுத்த பக்கத்தில் இவர்களும் இணையலாம் என்ற தலைப்பில் 22 நடிகர்களின் படங்களை வெளியிட்டுள்ளார்.
சித்தார்த், விக்ரம் பிரபு, விமல், பரத், நகுல், சிவகார்த்திகேயன், ஜெய், பிரசன்னா, கவுதம் உள்பட 22 பேர் படங்கள் இடம்பெற்றுள்ளது. இவர்களை கவுரவ தோற்றத்தில் நடிக்க பார்த்திபன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி