திரையுலகம்,முதன்மை செய்திகள் கோச்சடையான் (2014) சினிமா விமர்சனம் …

கோச்சடையான் (2014) சினிமா விமர்சனம் …

கோச்சடையான் (2014) சினிமா விமர்சனம் … post thumbnail image
கோட்டயப்பட்டினம் என்கிற நாட்டிலிருந்து ராணா என்கிற சிறுவன் அவர்களின் எதிரி நாடான கலிங்கபுரிக்கு செல்கிறான். அங்கு வளரும் ராணா, தன்னுடைய வீரத்தால் படைத்தளபதி ஆகிறார். அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிசெராப் மற்றும் இளவரசர் ஆதியை ஏமாற்றி தான் நினைத்தபடி ஒரு வீரனாக கோட்டயப் பட்டினத்திற்கு வருகிறார்.

கோச்சடையானின் தங்கையை கலிங்கபுரியில் உள்ள மாமா நாகேஷ் வளர்த்து வருகிறார். ராணாவின் தங்கையை இளவரசர் சரத்குமார் காதலித்து வருகிறார். இளவரசியான தீபிகா படுகோண் ராணவை காதலிக்கிறார். அதன் பிறகு படத்தின் கதை வேகமாக செல்கிறது.

இறுதியில் சிறுவயதில் காணமல் போன கோச்சடையானின் அண்ணன் திரும்பி வந்தாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் மீதிக்கதை.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிண்ணனி இசை பாடலுக்கும். காட்சிகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது. படத்தின் டிரைலர் மோசமாக இருந்தாலும் தியேட்டரில் படம் நன்றாக உள்ளது. ரஜினி, ஆதி, நாசர், சோபனா,தீபிகா படுகோண், சரத் குமார் ஆகியோரின் உருவங்கள் அனிமேஷன் கேரக்டர்களில் அருமையாக உள்ளது.

மொத்தத்தில் “கோச்சடையான்” திரைப்படம் – விறுவிறுப்புடன் ….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி