கார், மாமல்லபுரம் அடுத்த மணவை அருகே வந்தபோது எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த பாசிலின் நண்பர்கள் 3 பேர் பலியாகினர். பாசில் மற்றும் அவரது இன்னொரு நண்பர் விஜயகுமார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாசில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து டாக்டர்கள், பாசிலுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி