கடந்த 1970ம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபராக ரிச்சர்ட் நிக்சன் இருந்தார். அவர் 1972ம் ஆண்டில் சீனாவுக்கு வருகை தந்தார். அந்த கால கட்டத்தில் அமெரிக்கா–சீனா இடையேயான உறவு ‘பனிப்போர்’ போன்று இருந்தது.ஆனால் நிக்சனின் வருகைக்கு பிறகு சீனா–அமெரிக்கா இடையேயான உறவு வலுப்பட்டு பனிப்போர் விலகியது. அதன் காரணமாக சீனாவில் இன்னும் நிக்சன் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது.மோடி குஜராத் முதல்மந்திரி ஆக இருந்த போது 3 தடவை சீனா சென்றுள்ளார். இறுதியாக கடந்த 2011–ம் ஆண்டில் அங்கு சென்றபோது வதோதரா அருகே ரூ.400 கோடி செலவில் அதிக மின்திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பது குறித்து சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஆனது.
மோடிக்கு சீனாவுடன் ஏற்கனவே நல்லுறவு உள்ளது. எனவே தான் அவரை நிக்சனுடன் சீனா ஒப்பிட்டு புகழாரம் சூட்டியுள்ளது. இதற்கிடையே சீன அரசின் நிபுணர் லியூஷாங்யீ மோடி பற்றி குறிப்பிடும் போது, அவர் ஒரு வரம்பற்ற அதிகாரம் படைத்தவர்.அவர் பிரதமரானதும் நிக்சன் போன்று சீனாவுடன் ஆன உறவை மேலும் ஊக்கப்படுத்துவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி