அவர் தனது 13ஆவது வயதில் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக குடும்பத்துடன் கனடா நாட்டிற்கு இடம் பெயர்ந்தார்.இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் வழிதவறி போய் விட்டனர். இந்த துயர சம்பவத்தை பெர்குசன், இளவரசர் சார்லசிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். கனடா நாட்டிற்கு எவ்வாறு பெர்குசன் சென்றார் என்பது குறித்த விவரங்களை அவர் கூறியுள்ளார். அப்பொழுது, இளவரசர் சார்லஸ் சமீபத்திய நடவடிக்கைகளை ஒப்பிட்டு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் அடால்ப் ஹிட்லர் போல் செயல்படுகிறார் என கூறியுள்ளார்.
இதனை அங்கிருந்த பலரும் பார்த்து உள்ளனர். புதினை ஹிட்லருடன் ஒப்பிட்டு சார்லஸ் பேசியதை கேட்ட பெர்குசன் கூறும்போது, பெரும்பாலானவர்கள் ஆமோதிப்பதை போன்று நானும் உங்களுடன் ஒத்து போகிறேன் என்று கூறுவதே சரியாக இருக்கும்.அவர் இந்த கருத்தை கூறியதும் நான் ஆச்சரியமடைந்து விட்டேன். அரச பரம்பரையை சேர்ந்த அவர்கள் இதுபோன்று கூறமாட்டார்கள் என எனக்கு தெரியும்.ஆனால், இது மனப்பூர்வமான மற்றும் நேர்மையான ஒன்றாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி