மும்பை:-7வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பையில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகத்துக்கும், ஐ.பி.எல். நிர்வாகிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததால் இறுதிப்போட்டி பெங்களூருக்கு திடீரென மாற்றப்பட்டது.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எல்லா நிபந்தனைகளையும் ஏற்க தயார் என்றும் இறுதிப்போட்டியை மும்பையில் நடத்த வேண்டும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்க ஐ.பி.எல். நிர்வாக குழு மறுத்துவிட்டது.
மாற்றம் செய்யப்பட்ட படி இறுதிப்போட்டி பெங்களூரில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார். தங்களின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி