அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக ஒரு மனதாகத் தேர்வு!…

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக ஒரு மனதாகத் தேர்வு!…

நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக ஒரு மனதாகத் தேர்வு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவின் 16வது பிரதமராக நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில் அவரது பெயரை அத்வானி முன் மொழிய, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். இதனை அடுத்து, பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டதும், கூடியிருந்த தலைவர்கள் கைதட்டி வெற்றிக் கோஷம் எழுப்பினர். ராஜ்நாத் சிங் மற்றும் அத்வானி பூங்கொத்து கொடுத்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, ஒவ்வொரு தலைவர்களாக மோடிக்கு பூங்கொத்து கொடுத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி