செய்திகள்,திரையுலகம் நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…

நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!…

நடிகை லட்சுமிராயுடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்!… post thumbnail image
சென்னை:-சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு படத்தில் காமெடி ரகளை செய்து அந்த படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர் சந்தானம். அதன்காரணமாகவே சித்தார்த்,ஹன்சிகாவை வைத்து தான் இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும் அவரை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார் சுந்தர்.சி.

இந்நிலையில்,தான் இயக்கியுள்ள அரண்மனை படத்திலும் சந்தானத்துக்கு முக்கிய ரோல் கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி.ஹன்சிகா பிரதான வேடத்தில் நடிக்கும் இப்படம் அரண்மனை பேய்களை மையப்படுத்தின கதையில் உருவாகிறது. இதே படத்தில் சுந்தர்.சி. வினய், லட்சுமிராய், ஆண்ட்ரியா என பலர் இருந்தபோதும், சந்திரமுகியில் வடிவேலு நடித்தது போல் இப்படத்தில் சந்தானத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் இயக்குனர்.

திகில் காட்சிகள் மட்டுமின்றி, லட்சுமிராயுடன் அவருக்கு ஒரு அதிரடியான குத்துப்பாட்டும் உள்ளதாம். இருவரும் போட்டுள்ள கும்மாங்குத்து கவர்ச்சிப்பிரியர்களுக்கு நல்ல தீனி போடுமாம். அந்த அளவுக்கு தனது வளவளப்பான தேகத்தில் இளைஞர்கள் வழுக்கி விழும் வகையில் கவர்ச்சி பீரங்கியாகவும் வெடித்து சிதறியிருக்கிறாராம் லட்சுமிராய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி