செய்திகள்,திரையுலகம் ‘அதிதி’ அர்த்தம் என்ன?…

‘அதிதி’ அர்த்தம் என்ன?…

‘அதிதி’ அர்த்தம் என்ன?… post thumbnail image
சென்னை:-ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ் ஐஎன்சி., சார்பில் ராமகிருஷ்ணன் நாயர் தயாரித்திருக்கும் படம் ‘அதிதி’. நந்தா,அனன்யா ஜோடிகளாக நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் தம்பி ராமய்யா, சென்றாயன், பேபியுவினா, சம்பத்ராம், காஜல் பசுபதி, பாடகர் பிரசன்னா, அஸ்வதிவர்ஷா நடித்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் கட்சியில் ரக்ஷனா மௌரியா நடித்திருக்கிறார்.படம் பற்றி இயக்குனர் பரதன் கூறுகையில்,அதிதி என்றால் சுத்தத் தமிழில் விருந்தினன் என்று பெயர்.

இளம் ஜோடிகளான நந்தா, அனன்யா வாழ்க்கையில அதிதியாக அதாவது அழையா விருந்தாளியாக நுழையும் நிகேஷ்ராம், அவர்களுக்கு என்ன மாதிரியான இடைஞ்சல்களைத் தருகிறான் என்பது கதை. ரசனை மிகு படமாக அதிதி உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெற்று முடிந்திருக்கிறது. என்றார் பரதன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி