இவர்களில் அவ்னி மோடி குஜராத், காந்தி நகரைச் சேர்ந்தவர்.பி.ஏ பைனான்ஸ் படித்து முடித்திருக்கிறார். மாடலிங், விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். குஜராத்தில் அனைவருக்கும் தெரிந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். நான் ராஜாவாக போகிறேன் இவருக்கு முதல் படம். அதில் நகுலனின் இமாச்சல பிரதேச தோழியாக நடித்திருப்பார். தற்போது சண்டமாருதத்தில் வில்லன் சரத்குமாரின் ஜோடி. இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
சரயு சண்டமாருதத்தில் ஹீரோ சரத்குமாரின் ஜோடி. கேரளத்து வரவு. ஹஸ்பெண்ட் இன் கோவா, நித்ரா, ஜனப்ரியா, உள்பட 7 மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து விட்டு சண்டமாருதம் மூலமாக தமிழுக்கு வருகிறார். சரத்குமாருக்கு அத்தை பெண்ணாக கிராமத்து கேரக்டரில் நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி