போகோடா:-கொலம்பியாவில் தேவாலய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஒரு பஸ்சில் குழந்தைகளும், பெரியவர்களும் வந்துகொண்டிருந்தனர். பண்டாசியன் நகரம் அருகே பஸ் வந்தபோது திடீரென பஸ் பழுதாகி நின்றது.
அப்போது பஸ்சில் இருந்த எரிபொருள் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனே பஸ் முழுவதும் தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 31 குழந்தைகள் மற்றும் வாலிபர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால்,டிரைவர் காயம் இன்றி பத்திரமாக உயிர்தப்பினார்.விபத்து நடந்த பஸ்சில் இருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்று கைப்பற்றப்பட்டது.
தனியாருக்கு சொந்தமான இந்த பஸ் வாரந்தோறும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும் பணியை செய்து வந்தது. இதற்கிடையே பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக கொலம்பியா அதிபர் சாண்டோஸ் விரைந்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி