செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களூர்!…

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களூர்!…

ஐ.பி.எல்: சென்னையை வீழ்த்தியது பெங்களூர்!… post thumbnail image
ராஞ்சி:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை,பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்தது.துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித்தும் மெக்கல்லமும் களமிறங்கினர். மெக்கல்லம் ஆரம்பம் முதலே அடித்து ஆடி வந்த போது ஸ்மித் பந்துகளை சந்திக்க சற்று சிரமப்பட்டார். 5வது ஓவரில் அணி 29 ரன்கள் என்றிருந்தபோது 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த மெக்கல்லம் ஆரோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித்தும் அதே ஓவரில் 9 ரன்னுடன் நடையை கட்டினார். 2வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரெய்னா அதிரடியாக ஆடி பெங்களூர் அணியின் பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார். 3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹசியும் அடித்து ஆடினார்.
ஆட்டத்தின் 15வது ஓவரில் அணியின் ஸ்கோர் 104 ஆக இருந்தபோது ஹசி, முரளிதரன் பந்துவீச்சில் 25 ரன்களுக்கு அவுட்டானார். 4வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனியும் 7 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 5வது விக்கெட்டுக்கு ரெய்னாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ரெய்னா 48 பந்துகளில் 62 ரன்களும், ஜடேஜா 9 பந்துகளில் 10 ரன்களும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்களை குவித்தது.

139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பெங்களூர் விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கய பட்டேல் 10 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த கோலி கெயில்வுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார்.
27 ரன்கள் எடுத்தபோது கோலி அவுட் ஆனார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடினார். அவர் 14 பந்துகளில் 28 (1 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் 6 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யுவராஜ் சிங் சிக்சர் அடித்து அணியை எளிதாக வெற்றி பெற செய்ய உதவினார். பெங்களூர் அணி 5 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்து சென்னை அணியை தோற்கடித்தது.

CHE – Inning

Batsman R B M 4s 6s S/R
Smith D. R. c de Villiers A. b Aaron V. 9 15 18 1 0 60.00
McCullum B. c Starc M. b Aaron V. 19 13 16 1 2 146.15
Raina S. not out 62 48 85 6 1 129.17
Hussey D. c Starc M. b Muralitharan M. 25 29 47 1 1 86.21
Dhoni M. c Gayle C. b Nechim A. 7 6 8 1 0 116.67
Jadeja R. not out 10 9 28 0 0 111.11
Extras: (w 3, lb 3) 6
Total: (20 overs) 138 (6.9 runs per over)
Bowler O M R W E/R
Muralitharan M. 3.6 0 29 1 8.06
Starc M. 3.6 0 23 0 6.39
Aaron V. 2.6 0 29 2 11.15
Nechim A. 3.6 0 18 1 5.00
Chahal Y. 3.6 0 27 0 7.50
Rana S. 0.6 0 9 0 15.00

BAN -Inning

Batsman Status R B M 4s 6s S/R
Nechim A. not out 4 1 13 1 0 400.00
Rana S. c McCullum B. b Hussey D. 1 2 7 0 0 50.00
Gayle C. b Ashwin R. 46 50 66 3 3 92.00
Patel P. c Raina S. b Ashwin R. 10 14 11 2 0 71.43
Kohli V. st Dhoni M. b Jadeja R. 27 29 40 1 1 93.10
de Villiers A. c Jadeja R. b Hussey D. 28 14 20 1 3 200.00
Singh Y. not out 13 9 25 0 1 144.44
Extras: (w 4, b 1, lb 8) 13
Total: (19.5 overs) 142 (7.2 runs per over)
Bowler O M R W E/R
Raina S. 3.6 0 20 0 5.56
Hussey D. 2.5 0 38 2 15.20
Jadeja R. 3.6 0 31 1 8.61
Sharma M. 1.6 0 13 0 8.13
Ashwin R. 3.6 1 16 2 4.44
Badree S. 2.6 0 15 0 5.77

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி