அரசியல்,செய்திகள் மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…

மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!…

மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்!… post thumbnail image
நகரி:-சீமாந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் அள்ளகட்டா சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக ஷோபா நாகி ரெட்டி போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்.ஜெகன்மோகன் ரெட்டியின் உறவினரான இவர் 5வது முறையாக போட்டியிட்டார்.

ஏப்ரல் மாதம் 23ம் தேதி இரவு பிரசாரத்தை முடித்து விட்டு காரில் வீடு திரும்பிய போது சாலையில் கிடந்த நெல் வயலில் கார் ஏறி கவிழ்ந்து பல்டி அடித்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஷோபா நாகி ரெட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறாததாலும் ஓட்டு பதிவு எந்திரத்தில் இவரது பெயர் பொருத்தப்பட்ட காரணத்தினாலும் அள்ளகட்டா தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படவில்லை.தேர்தலில் ஷோபா நாகிரெட்டி வெற்றி பெற வேண்டும் என்று அவரது 2 மகள்களும், மகனும் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

எங்களது தாயை 4 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெறச் செய்தீர்கள். இறந்த பிறகும் அவரை வெற்றி பெறச் செய்து அவருக்கு பெருமை தேடி தாருங்கள் என்று பிரசாரத்தின் போது அவர்கள் உருக்கமாக பேசினார்கள். மகள்களின் பிரசாரத்துக்கு தேர்தலில் நல்ல பலன் கிடைத்துள்ளது.நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர் ஷோபா நாகி ரெட்டி சுமார் 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தெலுங்கு தேச வேட்பாளர் பிரபாகர்ராவை வீழ்த்தி சாதனை படைத்தார்.ஷோபா நாகி ரெட்டி 92,108 ஓட்டுகள் பெற்று இருந்தார். 2–வது இடத்தில் வந்த தெலுங்கு தேச வேட்பாளர்கள் பிரபாகர்ராவ் 74,180 ஓட்டுகள் பெற்றார்.

இதன் மூலம் மரணத்துக்கு பிறகும் வெற்றி பெற்று சாதனை படைத்த பெண் என்ற பெருமையை ஷோபா நாகிரெட்டி பெற்றுள்ளார்.ஷோபா நாகி ரெட்டி வெற்றி பெற்றால் அந்த தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதன்படி 6 மாதத்துக்குள் அள்ளகட்டா தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி