செய்திகள்,திரையுலகம் மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!…

மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!…

மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!… post thumbnail image
சென்னை:-பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் பரதேசி. இப்படம் 1930ம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த உடை வடிவமைப்புக்கான தேசிய விருது இந்த படத்திற்கு கிடைத்தது.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா ‘தாரை தப்பட்டை’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம் இயக்கும் புதிய படத்தையும் பாலா தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் நாயகனாக அதர்வா தேர்வாகியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்கவுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி