புதுடெல்லி:-பாரதீய ஜனதா வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி இன்று வதேதரா தொகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நாளை அவர் வாரணாசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். பிறகு காசிவிஸ்வநாதர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார்.
இதையடுத்து அவர் குஜராத் மாநில முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு டெல்லி புறப்பட்டு செல்வார். 21ம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிய வந்துள்ளது.ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் பதவி ஏற்பு வைபவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு அதிகாரிகள் செய்ய தொடங்கி விட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி