விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா ஈடுபட்டுள்ளது.நீண்ட நாட்களாக தொடரும் தேடுதல் பணிக்காக கூடுதல் நிதியை ஒதுக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆஸ்திரேலிய பட்ஜெட்டில் ரூ.501.88 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் நடைபெறும் தேடுதல் பணி தொடரும் நிலையில், அடுத்த 2 வருடங்களில் ரூ.334.96 கோடி நிதி ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு துறையிடம் வழங்கப்படும்.
கடந்த மார்ச் 30ம் தேதி அமைக்கப்பட்ட கூட்டு கழக ஒருங்கிணைப்பு மையம் அடுத்த இரு வருடங்களில் ரூ.11.16 கோடி விமான தேடுதல் பணிக்காக செலவிடும். இதேபோன்று விமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஆகியவற்றை அனுப்பி தேடுதல் பணி மேற்கொண்ட பாதுகாப்பு துறை ரூ.155.75 கோடி நிதியை அடுத்த இரு வருடங்களில் பெறும்.
விமான தேடுதல் பணிக்கான மொத்த செலவு தொகையானது எவ்வளவு காலம் அந்த பணி நடைபெறும் மற்றும் பிற நாடுகளால் எவ்வளவு பணம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் அமையும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி