செய்திகள்,திரையுலகம் புதுமுக நடிகையின் நடிப்பை புகழும் நடிகர் ஆர்யா!…

புதுமுக நடிகையின் நடிப்பை புகழும் நடிகர் ஆர்யா!…

புதுமுக நடிகையின் நடிப்பை புகழும் நடிகர் ஆர்யா!… post thumbnail image
சென்னை:-தனது தம்பி சத்யாவையும் நடிகராக்கி விட வேண்டும் என்று பல டைரக்டர்களிடம் சிபாரிசு கோரி வந்தார் நடிகர் ஆர்யா. ஆனால் யாரும் அவர் தம்பியை அறிமுகம் செய்ய முன்வரவில்லை. அதனால் படித்துறை என்றொரு படத்தை தானே தயாரித்து, தம்பி சத்யாவை அறிமுகம் செய்தார் ஆர்யா.அந்த படம் இப்போதுவரை வெளிவரவில்லை.

அதன்பிறகுதான் டி.வி நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் என்ற படத்தில் நடித்தார் சத்யா. ஆனால் அந்த படம் தோல்வியடைந்து விட்டது. அதனால் வழக்கம்போல் சத்யாவுக்கு படம் கொடுக்க யாருமே முன்வராததால் இப்போது அமரகாவியம் என்ற படத்தை தானே தயாரித்து வருகிறார் ஆர்யா.இந்த படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக நடிக்க பல கோலிவுட் நடிகைகள் தயாராக இருந்தபோதும் மலையாளத்தில் ரெட் ஒயின்ஸ், மேம்மோரிஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்த மியா ஜார்ஜ் என்ற நடிகையின் பர்பாமென்ஸ் தன்னை வெகுவாக பாதித்திருந்ததால் அவரை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஆர்யா.

இதற்கு முக்கிய காரணம் நடிப்பில் சில இடங்களில் தன் தம்பி மைனஸாக இருந்தாலும் அதை வெளியில் தெரியாத அளவுக்கு பில்லப் பண்ணி பர்பாமென்ஸ் கொடுத்து விடுவார் மியா என்ற நம்பிக்கைதானாம்.தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களில் எந்நேரமும் மியாவின் நடிப்புப் பற்றித்தான் பில்டப் கொடுத்து கொண்டிருக்கிறாராம். ஆர்யா புண்ணியத்தில் அமரகாவியம் படத்திற்கு பிறகு பல படங்கள் மியா ஜார்ஜின் படப்பட்டியலில் இருக்கும் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி