செய்திகள்,முதன்மை செய்திகள் நைஜீரியாவில் போலீஸ் அதிகாரியின் மனைவி, மகள்களை கடத்திய தீவிரவாதிகள்!…

நைஜீரியாவில் போலீஸ் அதிகாரியின் மனைவி, மகள்களை கடத்திய தீவிரவாதிகள்!…

நைஜீரியாவில் போலீஸ் அதிகாரியின் மனைவி, மகள்களை கடத்திய தீவிரவாதிகள்!… post thumbnail image
அபுஜா:-நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போராடி வரும் போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு, கடந்த மாதம் சிபாக் பள்ளிக்கூட மாணவிகள் 276 பேரை கடத்திச்சென்றது. இந்த சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கும் நடவடிக்கையில், நைஜீரிய ராணுவத்துடன், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் படைகளும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு பாலத்தை தீவிரவாதிகள் சேதப்படுத்தினர். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் மனைவி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கடத்திச்சென்று உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செலி ஒபாமா நேற்று ரேடியோவில் உரையாற்றியபோது, நைஜீரிய மாணவிகள் கடத்தப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாணவிகள் கடத்தப்பட்டது அறிந்ததும் எங்கள் இதயம் நொறுங்கி விட்டது. கடத்தப்பட்ட மாணவிகளை நானும் எனது கணவரும் சொந்த மகள்களாக கருதுகிறோம் என்று தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி