தற்போது 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று கொழும்புவில் தொடங்கியது.
இந்தியா சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 17 மீனவ பிரதிநிதிகள் மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்பட 26 பேர் இலங்கை சென்றனர். இலங்கை சார்பில் மீனவ பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் 30 பேர் பங்கேற்றனர்.
கொழும்பில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தையில் தடை செய்யப்பட்ட மின் வலைகளை பயன்படுத்தக் கூடாது. எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது. சிறை பிடிக்கும் மீனவர்களை உடனடியாக விடுவிப்பது உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சு நடைபெறுகிறது. நாளையும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நல்ல முடிவு ஏற்படும் என்று இந்திய மீனவ பிரதிநிதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி