கதாநாயகியாக திவ்யா சிங் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் புதிய முகம் ரிச்சு நடிக்கிறார். இவர் திவ்யா சிங்கின் உடன்பிறந்த தங்கை. அத்துடன் கோவை சரளா, இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கிறார்கள்.பணம் எப்படியெல்லாம் ஒருவன் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை காதல் மற்றும் ஆக்ஷனுடன் உருவாக்க இருக்கிறார்கள். இப்படம் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கும் என்று இயக்குனர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சசிசங்கர் மலையாளத்தில் 15 வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அதில் 2 படங்களுக்கு தேசிய விருதும் பெற்றிருக்கிறார். இது இவர் இயக்கும் இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி