அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடையும் என்று பிரசாரம் செய்து வந்தது. இதுமட்டுமின்றி அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லை பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்று கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்டது.இந்த தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அந்த குழுவினர் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.
அந்த அறிக்கையை ஏற்க கேரள அரசு மறுத்துவிட்டதுடன் புதிய குழுவை நியமிக்கவும்கோர்ட்டில் வலியுறுத்தியது. ஆனால் கேரள அரசின் இந்த வாதத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்த வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.தீர்ப்பில் நீதிபதிகள் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும், அணை பலவீனமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி