சென்னை:-நடிகை திரிஷா கடந்த சில நாட்களாக வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சென்னை வந்தார். தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் ‘கேக்’ வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
அவரது குடும்பத்தினர் நண்பர்கள் சக நடிகைகள் பங்கேற்று திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள்.பின்னர் நடிகைகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் நயன்தாரா, அமலாபால், ரம்யாகிருஷ்ணன் மற்றும் தோழிகள் பங்கேற்றனர். திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் புன்னகை படம் ரிலீசானது. ஜீவா ஜோடியாக இதில் நடித்து இருந்தார். இப்படத்தில் திரிஷாவின் நடிப்பு பேசப்பட்டது.
அடுத்து ஜெயம்ரவி ஜோடியாக நடித்த பூலோகம் படம் வருகிற 23ம் தேதி ரிலீசாக உள்ளது. சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி