இந்த வழக்கில் 64 பேரை போலீசார் சாட்சிகளாக குறிப்பிட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.இந்நிலையில் இந்த வழக்கில் முதல் முறையாக சாட்சிகள் சல்மான்கானை அடையாளம் காட்டினர். நேற்று நடந்த வழக்கு விசாரணையின் போது 3 பேர் அவரை அடையாளம் காட்டினர். விபத்தில் காயம் அடைந்த ஒருவர் சாட்சியம் அளிக்கும் போது விபத்து நடந்ததும் காரின் முன் பக்கத்தின் வலது புறத்தில் இருந்து சல்மான்கான் தள்ளாடியபடி வந்தார் என்றார். மற்றொருவர் சாட்சியம் கூறும் போது, டிரைவர் இருக்கையில் இருந்து சல்மான்கான் வந்ததாக தெரிவித்தார்.
காயம் அடைந்த மனுகான், முகமது கலீம், ஷேக் ஆகிய 3 சாட்சியங்கள் சல்மான்கானை அடையாளம் காட்டினார்கள். சல்மான்கான் காரை ஓட்டவில்லை என்று அவரது வக்கீல் இதுவரை கூறி வந்த நிலையில் சாட்சியங்கள் அடையாளம் காட்டியதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சல்மான்கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி