இந்நிலையில் நேற்று முந்தினம் தனது பெயரில் டுவிட்டர் கணக்கு தொடங்கிய ரஜினிக்கு சில மணி நேரங்களிலேயே அவரது ரசிகர்கள் அவரை இணையத்தில் பின்பற்ற தொடங்கினர். நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 2.15, 000க்கும் மேற்பட்டோர் ரஜினியுடன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து ரஜினி தனது வலைத்தளத்தில் கடவுளுக்கு வணக்கம் உங்கள் அனைவருக்கும் வணக்கம் என் ரசிகர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த புதுமையான டிஜிட்டல் பயணம் உண்மையிலேயே வியப்பளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
டுவிட்டர் அறிமுக உலகில் மிக பிரபலமானவர்களில் ரஜினிகாந்த் 6வது இடத்தில் உள்ளார்.
இந்திய அளவில் நடிகர் அமீர்கான் டுவிட்டரில் அறிமுகமான முதல் நாள் 46 ஆயிரம் பாலோவர்களை பெற்றார்.அமிதாப்பச்சன் 37,500 பாலோவர்களை பெற்றார்.ஆனால் ரஜினிகாந்த் இவர்களையெல்லாம் முறியடித்து உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி