இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு சத்யபிரகாஷ் உருக்கமாக பேசினார்.அப்போது அவர் பேசியதாவது: நான் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை பாக்யராஜ் சார் இது நம்ம ஆளு படத்துல வில்லனாக நடிக்க வச்சார். அவர் அன்று போட்ட பிச்சையில இன்னிக்கு நான் பத்து லாங்குவேஜ் படத்துல நடிக்கிறேன். தெலுங்கு இந்தி, கன்னடம் போஜ்புரி, இங்கிலீஸ், பீகாரின்னு எல்லா மொழியிலேயும் நடிக்கிறேன்.நான் பீகார்காரனாக இருந்தாலும் எங்க போனாலும், நான் மெட்ராசுன்னுதான் சொல்லுவேன். நான் ஒரு ஹாலிவுட் படத்துல நடிச்சேன். அதோட பிரிமியர் ஷோவுக்கு போனேன்.
அங்க நான் மெட்ராசுக்காரன்னு சொன்னதும் கட்டிப்புடிச்சிக்கிட்டாங்க. நீங்க மெட்ராசான்னு ஆச்சர்யப்பட்டாங்க. அந்தளவுக்கு இந்த ஊருக்கு பெருமை இருக்கு. எனக்கு அடுத்த ஜென்மம் இருக்கா இல்லியான்னு தெரியாது. ஒரு வேளை இருந்தா இந்த மெட்ராசுல பொறக்கணும், தமிழ் படங்கள்ல நடிக்கணும். அதான் என்னோட ஆசை. கடவுள்கிட்ட அதுக்குத்தான் தினமும் ஃபிரே பண்ணிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி