செய்திகள்,திரையுலகம் நடிகை இலியானாவை கைது செய்த போலீஸ்!…

நடிகை இலியானாவை கைது செய்த போலீஸ்!…

நடிகை இலியானாவை கைது செய்த போலீஸ்!… post thumbnail image
மும்பை:-அசின், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் ஹிந்தி சினிமாவில் கொடிகட்டிப் பறப்பதைப்பார்த்த இலியானாவும் தற்போது இந்தியில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார்.

அதற்காக, தென்னிந்திய படங்களில் நடித்ததை விடவும் உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தி நடிப்பதற்கும் அங்குள்ள டைரக்டர்களுக்கு உத்தரவாதம் கொடுத்து நடித்து வரும் இலியானா, தற்போது வருண்தவானுக்கு ஜோடியாக மெயின் தேரோ ஹீரோ என்ற படத்தில் நடித்துள்ளார்.அப்படம் விரைவில் திரைக்கு வர இருப்பதால், வருண்தவானுடன் சேர்ந்து தானும் அப்படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் இலியானா.

இந்நிலையில், போலி வாகனத்தட்டு பொருத்திய காரில் இலியானா பயணித்தபோது அவரையும், அவருடன் சென்றவர்களையும் மும்பை போலீசார் கைது செய்தார்களாம்.அதையடுத்து உடனடியாக இலியானா விடுவிக்கப்பட்டபோதும், இந்த செய்தி மும்பை வட்டாரத்தை கலக்கி விட்டதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி