செய்திகள்,திரையுலகம் தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 (2014) திரை விமர்சனம்…

தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 (2014) திரை விமர்சனம்…

தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஸ்பைடர் மேனான பீட்டரின் தந்தை ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அந்த நோயை சரிசெய்வதற்காக சிலந்தியின் உயிரணுக்களை கொண்டு ஆராய்ச்சி செய்கிறார் பீட்டருடைய அப்பா. அந்த ஆராய்ச்சியில் வெற்றியும் பெறுகிறார்.

ஆனால், இவர் கண்டுபிடித்த அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்பதால் தன்னுடைய கண்டுபிடிப்பை யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். ஒருவிபத்தில் இறந்தும் போகிறார்.இந்நிலையில், பீட்டர், வளர்ந்து பெரியவனாகிறான். ஸ்பைடர்மேனாக மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், பீட்டருடைய அப்பா வேலை செய்த ஆராய்ச்சி மையத்தில் எலக்ட்ரானிக் என்ஜினியராக பணியாற்றி வரும் மேக்ஸ், தவறுதலாக அங்கிருந்த ஒரு ஆராய்ச்சி நீர்த்தொட்டிக்குள் விழுந்து விடுகிறார். இதனால் அவர் ஒரு மின்சார மனிதனாக உருவெடுக்கிறார்.

பயந்த சுபாவத்துடன் இருந்த மேக்ஸ், இந்த சக்தி கிடைத்ததும் வில்லனாக மாறுகிறார். தன்னை எல்லோரும் கொண்டாடவேண்டும் என்ற ஈகோவும் இவருக்குள் வருகிறது. ஆனால், மக்கள் அனைவரும் ஸ்பைடர் மேனை கடவுளாக வழிபடுகிறார்கள் என்று தெரிந்ததும், ஸ்பைடர் மேனை கொன்று, தான் அந்த இடத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்.இந்நிலையில், ஆராய்ச்சி மையத்தின் தலைவரின் மகனும், தன்னுடைய அப்பா பாதிக்கப்பட்ட அதே கொடிய நோயினால் பாதிக்கப்படுகிறான். இதற்கு மாற்று மருந்தாக பீட்டருடைய அப்பா, ஆராய்ச்சி செய்து வைத்திருந்த மருந்து பற்றி கேள்விப்படுகிறான். அது மர்மமான இடத்தில் மறைக்கப்பட்டிருப்பதை அறியும் அவன், அதை மேக்ஸின் உதவியுடன் கைப்பற்றுகிறான்.

அந்த மருந்தை தன் உடம்பில் ஏற்றிக்கொள்ளும் ஆராய்ச்சி மைய தலைவரின் மகன் வித்தியாசமான தோற்றத்துடன் உருவெடுக்கிறான். இருவரும் சேர்ந்து ஸ்பைடர் மேனை கொல்ல முடிவெடுக்கின்றனர்.இறுதியில், ஸ்பைடர் மேனை கொன்று மக்கள் மனதில் இவர்கள் இடம்பிடித்தனரா? அல்லது இருவரையும் கொன்று மக்களையும் நாட்டையும் ஸ்பைடர் மேன் காப்பாற்றினாரா? என்பதே மீதிக்கதை.ஸ்பைடர் மேனாக நடித்திருக்கும் ஆண்ட்ரூ கார்பீல்டு துடிப்பான இளைஞராக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், எதிரிகளிடம் சண்டை போடும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி எம்மா ஸ்டோன் நாயகனுடன் காதல் செய்யும் காட்சிகளிலும், இறுதிக் காட்சியிலும் திறமையாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் மார்க் வெப் முந்தைய ஸ்பைடர் மேன் படங்களைப் போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். படம் பார்த்துக் கொண்டிருக்கும் நாமும் ஸ்பைடர் மேனுடன் சேர்ந்து பறப்பதுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறார்.படத்தில் ஆக்சன் காட்சிகளை குறைவாக வைத்து, வசனங்களை அதிகமாக வைத்திருப்பதால் படம் கொஞ்சம் போரடித்திருக்கிறது. 3 டி தொழில்நுட்பத்தை உபயோகித்திருப்பது கொஞ்சம் கூடுதல் பலம். கிராபிக்ஸ் காட்சிகளும் பிரமிக்கும்படியாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன்-2’ சூப்பர் ஹீரோ…..

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி