செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூர்!…

ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூர்!…

ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூர்!… post thumbnail image
பெங்களூர்:-ஐ.பி.எல் டி.20 ஆட்டத்தில் நேற்று கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஷிகர் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மோதின.முதலில் பேட் செய்ய களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 155 ரன்களை குவித்தது. பின்னர் 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீரர்களாக பார்த்திவ் படேலும், கெய்லும் களமிறங்கினர்.

அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பார்த்திவ் படேல் 3 ரன்னிலும், அணி கேப்டன் கோலி ரன் கணக்கை துவக்காமலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.அதிரடியாக ஆடிய கெய்லும் கர்ன் ஷர்மா பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய ரச்சோவும் 14 ரன்னில் அவுட்டானார். ஒரு கட்டத்தில் அந்த அணி 10.1 ஓவரில் 59 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய யுவராஜ் சிங்கும், டி வில்லியர்சும் பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். யுவராஜ் நிதானமாக ஆட, டி வில்லியர்ஸ் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கி சிதறடித்தார். எனினும் யுவராஜ் 16 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14.3 ஓவர்களில் 95 ஆக இருந்தது.அணியின் வெற்றிக்கு 5 ஓவரில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டி வில்லியர்ஸ் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.41 பந்துகளில் 89 ரன்களை குவித்த டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

HYD – Inning

Batsman R B M 4s 6s S/R
Finch A. c Patel P. b Starc M. 13 8 12 1 1 162.50
Dhawan S. c de Villiers A. b Aaron V. 37 36 67 4 0 102.78
Rahul L. c Gayle C. b Dinda A. 6 6 7 1 0 100.00
Warner D. b Starc M. 61 49 83 4 3 124.49
Sammy D. c Starc M. b Patel H. 8 8 17 0 1 100.00
Ojha N. c Starc M. b Aaron V. 15 11 15 1 1 136.36
Pathan I. not out 4 2 17 1 0 200.00
Sharma K. not out 1 1 14 0 0 100.00
Extras: (w 6, nb 1, lb 3) 10
Total: (20 overs) 155 (7.8 runs per over)
Bowler O M R W E/R
Starc M. 3.6 0 21 2 5.83
Dinda A. 3.6 0 39 1 10.83
Aaron V. 3.6 0 33 2 9.17
Patel H. 3.6 0 29 1 8.06
Chahal Y. 3.6 0 30 0 8.33

BAN – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Starc M. run out Finch A. 5 8 26 0 0 62.50
Patel H. not out 1 2 9 0 0 50.00
Gayle C. c Sammy D. b Sharma K. 27 19 33 3 2 142.11
Patel P. b Kumar B. 3 5 5 0 0 60.00
Kohli V. c Ojha N. b Kumar B. 0 5 4 0 0 0
Rossouw R. lbw Sharma K. 14 23 42 1 0 60.87
de Villiers A. not out 89 41 75 6 8 217.07
Singh Y. c Henriques M. b Sharma K. 14 16 22 1 1 87.50
Extras: (w 4, lb 1) 5
Total: (19.5 overs) 158 (8.0 runs per over)
Bowler O M R W E/R
Sammy D. 1.6 0 25 0 15.63
Pathan I. 2.5 0 25 0 10.00
Sharma K. 3.6 0 17 3 4.72
Steyn D. 3.6 0 39 0 10.83
Kumar B. 3.6 0 16 2 4.44
Sharma I. 2.6 0 35 0 13.46

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி