செய்திகள்,முதன்மை செய்திகள் கேதார்நாத் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டது!…

கேதார்நாத் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டது!…

கேதார்நாத் ஆலயம் மீண்டும் திறக்கப்பட்டது!… post thumbnail image
கேதார்நாத்:-கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் உத்திரகாண்ட்மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் சிறப்பு வாய்ந்த கேதார்நாத் ஆலயம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த வருடம் முழுவதும் அங்கு முழுவீச்சில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனையடுத்து ஒரு வருடம் கழித்து நேற்று வழிபாட்டிற்காக கேதார்நாத் ஆலயம் திறக்கப்பட்டது. ஆலயம் திறக்கப்பட்ட முதல்நாளே ஆயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகள் இங்கு வருகை புரிந்தனர். மேலும் ஏராளமான பொதுமக்களும் இந்த ஆலய தரிசனத்திற்கு வருகை தந்தனர். இதனால் இந்த ஆலயம் இழந்த தனது பொலிவை மீண்டும் பெற்றுள்ளது.

நாட்டிலுள்ள இந்துக்களின் புனித தலமான இங்கு ஆறு மாத காலம் வரை துறவிகள் வருகைபுரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக சிறப்பு வசதிகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி