சென்னை:-நடிகை நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு, ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவன் படங்களில் நடித்து வருகிறார்.அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது.
ரீஎன்ட்ரியில் முதல் படத்திலேயே அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்த நயன்தாரா, அதையடுத்து ஆர்யாவுடன் ராஜாராணியில் நடித்தார். ஆனால் அதையடுத்து கஹானி ரீமேக்கான அனாமிகாவில் டைட்டீல் ரோலில் நடித்தார். ஆக, அவரது ரீ-என்ட்ரி நல்ல அமோகமாகவே இருக்கிறது.
செகண்ட் இன்னிங்சில் நான் நினைத்து பார்க்காத நல்ல விசயங்களாக நடக்கிறது என்று உற்சாகத்துடன் கூறிவரும் நயன்தாரா,முதல் ரவுண்டில் நடித்த விஜய்யுடன்தான் இன்னும் ஜோடி சேரவில்லை. ஆனால் அதற்கான காலமும் விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கிறேன். என கூறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி