இந்த படத்துக்கான சிறப்பு பூஜை மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், கர்நாடக வீட்டு வசதி மந்திரியும், பிரபல நடிகருமான அம்பரீஷ், அவருடைய மனைவி சுமலதா, படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முதன் முதலாக சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சிக்கு மந்திரி அம்பரீஷ் ‘கிளாப்’ அடித்து படப்பிடிப்பை தொடங்கிவைத்தார். அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கிய பூஜை 6 மணிவரை நடைபெற்றது.
ரூ.200 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட இருக்கும் இந்த படத்தின் சில காட்சிகளை வெளிநாடுகளிலும் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. படத்தின் முழு படப்பிடிப்பையும் 50 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.முன்னதாக மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு மந்திரி அம்பரீஷ் நிருபர்களிடம் பேசுகையில், இன்று சுபதினம். இந்த நல்ல நாளில் எனது நண்பர் ரஜினியின் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. பொதுவாகவே ரஜினிகாந்த் படம் என்றால் அதற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோல இந்த படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைய வாழ்த்துகிறேன் என்றார்.இந்த படம் மிக குறுகிய கால இடைவெளியில் எடுக்கப்பட்டு வரும் டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி