இதில் நந்திதா தாஸ், விசாகா சிங், அனுஹாசன் போன்றவர்கள் உறுப்பினராகி உள்ளனர். கறுப்பு நிற தோற்றத்துடன் இருக்கும் பெண் அழகு கிரீம் பயன்படுத்தி வெள்ளையாக மாறும் விளம்பர படமொன்றில் நடித்ததற்கு இப்போது வருத்தம் தெரிவித்திருக்கும் விசாகா சிங், அந்த எண்ணத்தை மாற்றி கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மாடல் அழகியாக இருந்த போது சிவப்பு நிற பெண்கள் தன்னை ஒதுக்கியதை நினைவுகூர்ந்த அவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக தனக்கென ஒரு இடம் பிடித்திருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா மற்றும் வெளிநாட்டில் நடக்கும் இது பற்றிய முகாமில் பங்கேற்று பேச சம்மதித்திருக்கிறார். டார்க் ஈஸ் பியூட்டிபுல் அமைப்பில் இணைந்திருப்பதை தனது ஒரிஜினல் நிறத்துடன் கூடிய போஸ்டரை பேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அதற்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் லைக் கொடுத்திருக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி