லண்டன்:-கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரிய விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பரிசுத்தொகை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 2013ம் ஆண்டு போட்டியை விட பரிசுத்தொகை 10.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.253 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.17½ கோடி வீதம் வழங்கப்படும்.
இதே போல் தொடக்க சுற்றுகளிலேயே வெளியேறும் வீரர், வீராங்கனைகளும் பரிசுத்தொகை 12.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி