சென்னை:-அனாமிகாவைத் தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு, ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா, அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. ஏற்கனவே சூர்யாவுடன் கஜினி, ஆதவன் படங்களில் நடித்த நயன்தாரா இந்த வாய்ப்பினால் உற்சாகத்தில் இருக்கிறார்.
நடிகை நயன்தாரா கூறுகையில்,செகண்ட் இன்னிங்சில் நான் நினைத்து பார்க்காத நல்ல விசயங்களாக நடக்கிறது இப்போது சூர்யாவுடனும் மீண்டும் ஜோடி சேர்ந்து விட்ட நான், முதல் ரவுண்டில் நடித்த விஜய்யுடன்தான் இன்னும் ஜோடி சேரவில்லை. ஆனால் அதற்கான காலமும் விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கிறேன். அது விஜய் நடிக்கும் அடுத்த படமோ இல்லை அதற்கடுத்த படமாகக்கூட இருக்கலாம் என கூறுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி