சென்னை:-வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். பென்சில் படம் மூலம் ஹீரோவாகிறார்.இருப்பினும் சில படங்களுக்கு இசையமைத்தபடியே நடிப்பையும் தொடர நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், பென்சில் படத்தை முடித்து விட்டதால், அடுத்து நயன்தாரா இல்லேன்னா திரிஷா என்ற படத்திலும் நடிக்கிறார்.
பென்சில் படத்தில், படிக்கிற பசங்களுக்கு ஏதோ மெசேஜ் சொல்லவரும் அவர், இந்த புதிய படத்தில் இந்த மாதிரியான காதலிதான் வேண்டும் என்று வெறித்தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு அட்வைஸ் செய்கிறாராம்.
இந்த படத்தில் இரண்டு பெரிய நடிகைகளின் பெயரை டைட்டீலாக பயன்படுத்துவதால்,அவர்கள் இருவரையும் நேரடியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி