இந்த செய்தி குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்ட அமிதாப் பச்சன் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இருந்து ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு படிப்புகளுக்கு வரும் தகுதியுடைய மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படல் வேண்டும் என்றார்.தன்னை இந்தத் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு அழைத்த விக்டோரியா மாகாண அரசிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். 11 நாள் நடைபெறும் இந்த விழாவில் மொத்தம் 40 திரைப்படங்கள் திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு இந்தியத் திரைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவை விக்டோரியா மாகாணம் வளர்த்து வருகின்றது. இந்த அரவணைப்பும், கருணையும் இந்திய மக்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.
இறுதியில் குறும்படங்களில் இருந்து தொடங்கி அனைத்துப் பிரிவுகளிலும் தேர்வு செய்யப்படும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுவது சிறப்பாகும் என்று இந்நிகழ்ச்சி பற்றி அமிதாப்பச்சன் தனது இணையதளத்தகவலில் வெளியிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி