செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…

பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…

பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!… post thumbnail image
லண்டன்:-மனிதன் உழைப்பது பசியை போக்கத்தான்.அந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

அந்த மாத்திரையில் உள்ள ‘அசிடேட்’ என்ற மூலக்கூறு உணவு பொருளில் உள்ள நார்ச்சத்து செரிக்காமல் தடுக்கிறது. இதன் மூலம் உணவுப் பொருட்களின் மீதான நாட்டம் குறைகிறது.இந்த மாத்திரையின் தாக்கத்தினால் ரத்தம், பெருங்குடல் மற்றும் மூளைக்கு உணவு பொருட்கள் சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி