நேற்று சிரஞ்சீவி அனந்தபுரம் மாவட்டம் கோரண்ட்லா பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் மீது கூட்டத்தில் பங்கேற்ற சிலர் முட்டை, செருப்புகளை வீசினார்கள். இவைகளை பூவுக்குள் சுற்றி விசினார்கள். பூக்கள்தான் வீசப்படுகிறது என போலீசார் முதலில் கூறினார்கள்.
ஆனால், பூவுக்குள் மறைத்து வீசப்பட்ட ஒரு முட்டை சிரஞ்சீவி மீது பட்டு உடைந்த பிறகுதான் முட்டை என தெரியவந்தது. இதே போல் தண்ணீர் பாட்டிலும் பூவுக்குள் மறைத்து வீசப்பட்டது. சுதாரித்துக் கொண்ட போலீசார் சிரஞ்சீவியை சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.இதையடுத்து சிரஞ்சீவி பொதுக்கூட்டத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு திரும்பினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி