அகமதாபாத்:-பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அகமதாபாத்தில் இன்று ஓட்டு போட்டார். பின்னர் அவர் ஓட்டு சாவடி அருகே நிருபர்களை சந்தித்தபோது, தாமரை சின்னத்தை கையில் எடுத்து காட்டினார். அந்த சின்னத்தை அவர் கையில் வைத்தவாறு தனது செல்போனிலும் படமும் எடுத்துக் கொண்டார். இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயல் என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ், இது தொடர்பாக தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுத்தது.
சின்னத்தை காட்டியதன் மூலம் மோடி தேர்தல் விதிமுறையை மீறிவிட்டதாகவும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது புகாரில் வலியுறுத்தி உள்ளது. இந்த புகாரை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், மோடி மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஆதரவு திரட்டும் நோக்கில் வாக்குச்சாவடியில் அவர் அரசியல் பேசியிருப்பது தெளிவாகிறது. நாடு முழுவதும் இன்று நடைபெறும் வாக்குப்பதிவில் தாக்கத்தை ஏற்படுத்துவதே அவரது நோக்கமாக உள்ளது என்று தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி