சென்னை:நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். நிறைய படவாயப்புகள் வந்தும் நடிக்கவில்லை.தற்போது ‘பசங்க’ படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ் குழந்தைகளுக்கான படமொன்றை இயக்குகிறார்.
இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதையை ஜோதிகாவிடம் சொல்லி பாண்டிராஜ் ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து பாண்டிராஜிடம் கேட்டபோது, இதுவரை ஜோதிகாவிடம் கதை சொல்லவில்லை. அவரிடம் கதை சொல்ல யோசித்து கொண்டு இருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி