செய்திகள்,திரையுலகம் அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் என விஜய் அறிவிப்பு!…

அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் என விஜய் அறிவிப்பு!…

அமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன் என விஜய் அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்களில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.இவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

ஜூன் 7ம் தேதி கொச்சியில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகவும், 12ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது என்றும் செய்திகள் வந்தன. ஆனால் விஜய் கூறும் போது, அமலாபால் படங்களில் பிசியாக நடிக்கிறார். எனக்கு ‘சைவம்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு எங்கள் திருமணம் நடக்கும் என்றார்.

அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் விஜய்யை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி அமலாபாலும், அவரது பெற்றோரும் வற்புறுத்துவதாக செய்திகள் வந்தன.இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது எந்த ஆதாரமும் இல்லாம் இந்த செய்தி பரவி உள்ளது.என் மதத்தில் இருந்து வேறு மதத்துக்கு நான் மாற மாட்டேன் என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி